வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக திருமணம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அண்மையில் அர்ச்சனாவின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அர்ச்சனா திருமணம் எப்போது என பிரியா பவானி சங்கரிடம் கேள்வி எழுப்ப, திருமணம் தாமதம் ஆகி கொண்டிருப்பதற்கு காரணம் சோம்பேறி தனம் தான்.
நிறைய பிளான் பண்ணனும், திருமணத்திற்கு பல வேலைகள் இருக்கு. ஒரு வேலை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி இருந்தா இந்நேரம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரியா பவானி ஷங்கர் எப்படியும் அடுத்தாண்டு திருமணம் செய்து கொள்ள பிளான் செய்துள்ளதாகவும் அதை முதல் முறையாக இப்போதுதான் நான் கூறுகிறேன் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். எனவே பிரியா பவானி ஷங்கருக்கு 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
மேலும் தன்னுடைய காதலர் குறித்து அந்த பேட்டியில் பிரியா பவானி ஷங்கர் கூறுகையில், தன்னுடைய வாழ்க்கையில் ராஜ் கிடைத்ததற்கு நான் மிகவும் ஆசீர்வதிக்க பட்டிருக்க வேண்டும். அவர் இல்லை என்றால் நான் இப்போதும் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி பெண்ணாக தான் இருந்திருப்பேன்.
அவர் கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளது. அதேபோல் தன்னிடம் கோபமாக இருக்கும் போது என் அம்மா சிலமுறை நீ மட்டும் அந்த பையன விட்டுட்டேன்னா நீ என் மூஞ்சிலேயே முழிக்காத. நான் அந்த பையன் கூட போயி அவங்க வீட்டிலேயே தங்கிடுவேன் என சொல்லுவாங்க என தெரிவித்துள்ளார்.