ஹரின் பிரியாவிடை; வெற்றிடத்துக்கு ஹிருணிகா பிரேமச்சந்திர

0
65

ஹரின் பெர்னாண்டோவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கியமை சட்டத்துக்கு உடன்பட்டது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை அடுத்து தன்னுடைய அமைச்சுக்கு சென்ற சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஊழியர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு அமைச்சில் இருந்து, இன்று (09) வெளியேறினார்.

இந்நிலையில், ஹரினின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.