துனிசியா பிரதமர் திடீரென பதவி நீக்கம்

0
43

துனிசியா பிரதமர் அகமது ஹச்சானியை (Ahmed Hachani) எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல் மதௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக துனிசியா ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஹச்சானி துனிசியா பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இவர் நஜிலா பௌடனை தொடர்ந்து துனிசியா பிரதமராக பதவியேற்றார். அதேவேளை முன்னதாக நஜிலா பௌடனும், பிரதமர் பதவியில் இருந்து எவ்வித காரணமும் இன்றி நீக்கப்பட்டார் .

Ahmed Hachani

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று கைஸ் சையத் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஆணை மூலம் ஆட்சி செய்வதாக அறிவித்த நிலையில் துனிசியா அரசியலமைப்பு 2022 ஆம் ஆண்டு மாற்றி எழுதப்பட்டது.

அதன்படி துனிசியாவில் ஜனாதிபதிக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு குறைந்த அளவிலான அதிகாரத்தை வழங்கும் வகையில் மாற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிரதமரமாக பொறுப்பேறகும் மௌதரி கடந்த மே மாதம் தான் அமைச்சரவையில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.