ஹமாஸ் புதிய தலைவர் தெரிவின் பின்னணி: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி

0
42

சின்வாரின் பதவி உயர்வானது பலஸ்தீனப் பிரச்சினை இப்போது ஈரான் மற்றும் ஹமாஸால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தியை உலகிற்கு அனுப்புகிறது என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளாார்.

யஹ்யா சின்வார் (Yahya Sinwar) ஹமாஸ் (Hamas) தலைவராக நியமிக்கப்பட்டதை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் இஸ்ரேல் கட்ஸ் இட்ட பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் அந்த பதிவில், காசாவில் (Gaza) இஸ்ரேலிய நடவடிக்கை இல்லாவிட்டால் அந்தப் பகுதி முழுவதுமாக ஹமாஸின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும்.

யூதேயா (Judea) மற்றும் சமாரியாவில், அப்பாஸும் பலஸ்தீனிய அதிகாரமும் (Palestine), ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கைகளாலும், ஈரானால் (Iran) ஆதரிக்கப்படும் இஸ்லாமிய ஜிஹாத் உள்கட்டமைப்புகளாலும் மட்டுமே உயிர் வாழ்கின்றன. ஜோர்தானிய அரசாங்கத்தை சீர்குலைப்பதற்காக ஜோர்டானுக்குள் ஆயுதங்களைக் கடத்த ஈரான் வேலை செய்து வருகிறது.

ஜூடியா மற்றும் சமாரியாவில் உள்ள அகதிகள் முகாம்கள் மற்றும் முழுப் பகுதியிலும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியுடன் இஸ்ரேலின் முக்கிய மக்கள்தொகை மையங்களுக்கு எதிராக கிழக்கிலிருந்து மற்றொரு பயங்கரவாத முன்னணியை நிறுவ ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகிறது.

மற்றொரு ஈரானிய-இஸ்லாமிய தீவிரவாத கோட்டை ஸ்தாபிப்பதைத் தடுக்கவும் மற்றும் பலஸ்தீனியர்கள் தங்கள் உள் விவகாரங்களை நிர்வகிக்கவும் இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் கட்டுப்பாட்டை பராமரிக்க வேண்டும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.