சினிமாவைப் பொறுத்தவரையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் வெற்றிப் படங்கள் பட்டியலில் இடம் பிடிக்கும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்திய டொப் 6 திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.
எந்திரன் 2.O
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜெக்ஸன் நடிப்பில் உருவான 2.O, ரூபாய் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்த லியோ திரைப்படம், ரூபாய் 615 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயிலர் திரைப்படம் ரூபாய் 607 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.
பொன்னியின் செல்வன் 1
மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுப் படமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 ரூபாய் 498 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம், ரூபாய் 460 கோடிக்கு மேல் வசூலித்தது.
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு ரூபாய் 343 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.