அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடக்கூடிய நிலையில் தனது துணை அதிபர் வேட்பாளரை அவர் அறிவித்துள்ளார்.
இதன்படி மினசோட்டா (Minnesota) மாநிலத்தின் ஆளுநர் டிம் வால்ஸ் அவர்களை துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தெரிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து எதிரணியில் இந்திய வம்சாவளிப் பெண்மணி கமலா ஹாரிஸ் களம் காணுகிறார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இன்று (06-08-2024) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.