எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க கட்டுப்பணத்தை திங்கள்கிழமை (5) காலை வைப்பிலிட்டுள்ளார்.
இலங்கை ஜனதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவர் மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பணத்தை வைப்பிலிட்ட 15ஆவது நபரான அமரசிங்க ஆறாவது சுயேச்சை வேட்பாளரும் ஆவார்.