கிளப் வசந்தவின் நிர்வாண புகைப்படங்கள் வெளியானது எப்படி?: பொலிஸார் தீவிர விசாரணை

0
51

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவின் சடலத்தின் நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவர்கள் சிக்கலில்

கிளப் வசந்தவின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை மூன்று மருத்துவ மாணவர்கள் மேற்கொண்டதாக தற்போது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவர்கள் மூலம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் கொலைச் சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகள் ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெற்று அது தொடர்பில் செய்திகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் இருந்து குறிப்புகளையும் உண்மைகளையும் பெற்றுக் கொண்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.