14 வயதில் விமானம் செலுத்திய கனடிய சிறுமி

0
68

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனியாக விமானத்தை செலுத்தி அனைவரதும் பாராட்டை பெற்றுள்ளார்.

14 வயதான அனாயா சொஹைல் என்ற சிறுமியே இவ்வாறு விமானத்தை தனியாக இயக்கி வானில் பறந்துள்ளார். சிறு வயது முதலே விமானத்தை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் தமக்கு இருந்ததாக அனாயா தெரிவிக்கின்றார்.

வானில் விமானங்களை பார்க்கும் தருணங்களில் அவ்வாறு விமானம் ஒன்றை தாமும் இயக்க வேண்டும் என்ற ஆசை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அறிவுறுத்தல்களை வழங்கும் ஒருவருடன் பயணம் செய்வதை விடவும் தனித்து பயணம் செய்வதன் அனுபவம் வித்தியாசமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சிஷ்னா என்று அழைக்கப்படும் சிறிய ரக விமானம் ஒன்றை அனாயா தனியாக இயக்கி வானில் பறந்துள்ளார். 12 வயது முதல் விமானம் செலுத்துவது குறித்து கற்று வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எதிர்காலத்தில் வர்த்தக விமானம் ஒன்றின் விமானியாக பணியாற்ற வேண்டும் என்பது தமது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார். ஏ-380 ரக விமானத்தின் கேப்டனாக பணியாற்ற வேண்டும் என்ற கனவு தமக்குள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.