தகவல் பரிமாற்றமானது மனிதரிடத்தில் தொன்றுதொட்டு காணப்படும் விடயமே ஆனாலும் தற்போதைய நவீன ஊடகங்களின் ஆதிக்கம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சரியா தகவல்கள் பிழையாகவும் போலியான தகவல்கள் உண்மைபோன்ற வடிவமைப்பிலும் அதிகமாக பகிரப்படுகின்றது. அதிலும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அதிகமாக போலியான தகவல்கள் பகிரப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை ஜெனீவா ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
வெறுப்பை பகிர வேண்டாம்! ஒவ்வொரு இடுகையும் ஒரு தூண்டும் ஆற்றலைக் கொண்டது. எனவே, பொறுப்புடன் பகிர்ந்து கொள்வோம். மற்றும் நமது ஒன்றோடொன்று இணைந்த உண்மையான சக்தியைப் பயன்படுத்துவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமான போலி தகவல்கள் காரணமாகவே தற்போது ஜெனீவா அமைப்பினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ள வேளையில், சமூகஊடகங்களிலும் போலியாக மற்றும் தவறான கருத்துக்கள் பகிரப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தகக்தாகும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், ஒருவரின் பதிவு மற்றொருவரை பாதிப்பதாக, ஒரு மதத்தை இழிவு படுத்துவதாக, ஒரு கூட்டத்தாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக, வெறுப்பு பேச்சுகளை கொண்டதாக இருக்கின்றது.
மேலும், இன அல்லது பால் பாகுபாடு கொண்டதாக, ஆபாச காட்சிகளை கொண்டதாக இனவாதம் / மதவாதம் என்பவற்றை தூண்டும் வகையில் அமையுமானால் அவற்றுக்கெதிராக பாவனையாளர்களே முறைப்பாடுகளை மேற்கொள்ள பேஸ்புக் இடமளித்துள்ளது.
அவ்வாறான பதிவுகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் பொழுது அந்த பதிவுகள் பேஸ்புக் சமூக தரநிலைகளை மீறுவதாக இருந்ததால் அவற்றை நீக்கிவிடும்.
ஒரு பதிவுக்கு எதிராக பலர் இவ்வாறு முறைப்பாடு செய்யும் போது, குறித்த பதிவை இட்டவரின் சமூகவலைத்தள கணக்கை தற்காலிகமாக தடை செய்யக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றது.
எனினும், இது மிகவும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது சந்தேகமானதே. ஆகவே ஒரு தகவலை பகிரும் முன் அது தொடர்பிலான உண்மைத் தன்மையை சரிபார்ப்பது அவசியமாகும்.