ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickresinghe) மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆகியோர் யாழில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடியுள்ளனர்.
யாழிற்கு (Jaffna) நேற்று (02.08.2024) விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த நிகழ்வுகளின் இறுதியாக யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள ஒரு ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு சென்று ஐஸ்கிரீம் உண்டு அங்கிருந்த மக்களுடனும் உரையாடியுள்ளார்.
மேலும், அதை அறிந்து அவ்விடத்தில் குவிந்த பொதுமக்கள் ஜனாதிபதியுடன் தாமும் நின்று ஆர்வமாக புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.