ஒஸ்கார் விருதினை வழக்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகியுள்ளது.
இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தனுஷ் மற்றும் ராயன் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் திகதி ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.