20வது வருட ஃபிட்னஸ் ரகசியத்தை உடைத்த நடிகை நயன்தாரா: டயட் பற்றி என்ன கூறியிருக்கின்றார்

0
75

20 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வரும் நடிகை நயன்தாரா ஃபிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். நயன்தாரா அவ்வப்போது தனது குழந்தைகளுடன் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிப்பாராம்.

அடுத்ததாக தமிழில் கவினுடன் சேர்ந்து நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 39 வயதிலும் நயன்தாரா இவ்வளவு ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான ரகசியத்தை பலரும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டிருப்பீர்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனது பிட்னஸிற்கான ரகசியம் குறித்து இஸ்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அது என்னவென்பதைக் காண்போம்.

நயன்தாரா ஆரம்ப காலத்தில் சற்று குண்டாகவே இருந்தார். ஆனால் திரையுலகில் நன்கு சிக்கென்று உடலை பராமரித்து வந்தால் தான் நீடித்திருக்க முடியும் என்பதற்காக நயன்தாரா டயட்டில் இருந்துள்ளார். ஆனால் அப்போது கடுமையான டயட்டை மேற்கொண்டதன் விளைவாக மருத்துவமனையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

இதுவரை இவர் டயட் என்றால் தனக்கு பிடித்ததை சாப்பிடாமல் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், தற்போது டயட் என்பது கலோரிகளை எண்ணுவது அல்ல, மாறாக ஊட்டச்சத்துக்களை எண்ணுவது மற்றும் சரியான அளவுகளில் பலவகையான உணவுகளை உண்பது பற்றியது என்பதை தெரிந்து கொண்டதாகவும் அந்த இன்ஸ்டா போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

டயட் பற்றிய கண்ணோட்டத்தை தனது ஊட்டச்சத்து நிபுணர் மும்ம் கனோரிவால் மாற்றியுள்ளதாகவும், தற்போது தான் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடலுக்கு வேண்டிய சத்துக்களை சரியாக பெறுவதற்கு தேவையான சரியான உணவுத் திட்டத்தை அமைத்து கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஊட்டச்சத்து நிபுணரின் சிறப்பான உணவுத் திட்டமானது வீட்டில் சமைக்கும் உணவின் மீதான காதலை அதிகரித்தது என்றும், ஜங்க் உணவுகளின் மீதான நாட்டம் குறைந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். மொத்தத்தில் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உணவு முக்கியமானது.

நாம் என்ன சாப்பிடுகிறோமோ அது நமது ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்புவதாகவும், தனது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை தழுவ உங்களை ஊக்குவிப்பதாக நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.