பிரித்தானியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கோடை கால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்த இளைஞன் ஒருவர் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் 2 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (29.07.2024) பகல் 12 மணியளவில் சவுத்போர்ட் (Southport) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்தத் தாக்குதலில் காயமடைந்த 9 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அதேவேளை, சிறுவர்களை காப்பாற்ற முயன்ற இருவரும் காயமடைந்துள்ள நிலையில், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை பொலிஸார் சம்பவ இடத்திலேயே சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞன் மீது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.