வகுப்பறையில் பாய் விரித்து தூங்கிய ஆசிரியை; வெளியாகிய காணொளி

0
75

வகுப்பறையில் பாய் விரித்து படுத்து உறங்கி ஆசிரியருக்கு மாணவிகள் சிலர் விசிறியால் வீசிறிவிட்ட காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் தானிபூர் பகுதியில் உள்ள கோகுல்பூரில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

குறித்த பள்ளியில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தாமல் தரையில் பாய் விரித்து படுத்துறங்குகிறார். அவரை சுற்றி மூன்று மாணவிகள் விசிறியால் வீசி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து வகுப்பறையில் பாய் விரித்து உறங்கிய ஆசிரியை டிம்பிள் பன்சால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.