துருக்கியில் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ரஷியாவின் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் என வர்ணிக்கப்படும் சமூக வலைதளத்தில் பிரபலமான 38 வயதான டாட்டியானா ஓசோலினா உயிரிழந்துள்ளார். இவர் “மோடோ டான்யா” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார்.
இவர் துருக்கியிலுள்ள மிலாஸ்-சேக் நெடுஞ்சாலையில் பி.எம்.டபிள்யூ.எஸ்1000ஆர். என்ற பைக்கில் நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தபோது பைக் இவரது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டாட்டியானா ஓசோலினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, டாட்டியானா ஓசோலினாவுடன் சென்ற இரண்டு நண்பர்கள் இந்த விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.