மறைந்தும் மறையாதவர்கள் வரிசையில் சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இவர் 80களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். இவரது கண்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இவர் எக்டிங் கெரியரில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த வேளை 1996 ஆம் ஆண்டு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுவரையில் அவரது மரணம் மர்மமான ஒன்றாகவே உள்ளது.
இவ்வாறிருக்க அவன் இவன் திரைப்பட புகழ் நடிகர் ஜி.எம்.குமார், சில்க் ஸ்மிதா குறித்து பேசுகையில், “அவர் ஒரு தங்கமான பெண். அவர் நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் நான் நடிகை பல்லவியுடன் உறவில் இருந்தேன். இல்லையென்றால் நானே சில்க் ஸ்மிதாவை காதலித்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.