உள்ளத்தை அள்ளித் தா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதனைத் தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனவர். அதன் பின்பு நடிப்பதற்கு இடைவெளி விட்டார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ரம்பா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். அதன் பின் இடைவெளி ஏற்பட்டு நான் நடித்து சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. மறுபடியும் சினிமாவில் நடிப்பீர்களா என பலர் கேட்கின்றனர். பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.