பிரான்ஸ் ஒலிம்பிக்கிற்கு ISIS-K அச்சுறுத்தல்?

0
57

இந்த வருட ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸில் இடம்பெறவுள்ள நிலையில் ISIS-K அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் சோவியத் யூனியனின் காலத்தில் இருந்து அங்கு வந்துள்ள புலம்பெயர்ந்த சமூகங்கள் குறித்து பிரான்ஸ் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது ISIS-K தீவிரவாத அமைப்பிடம் இருந்து ஒலிம்பிக்கை பாதுகாக்கும் முயற்சியாகும். ராய்ட்டர்ஸ் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கிற்கு ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தலை அதிகாரிகள் அடையாளம் காணவில்லை என்றாலும், உள்துறை அமைச்சர் ISIS-K நிச்சயமாக மிகவும் ஆபத்தான இயக்கம் என்றார்.

அதேவேளை ISIS-K என்பது ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ISIS பயங்கரவாத அமைப்பின் ஒரு கிளை ஆகும்.

இந்நிலையில் மக்களுக்கு எந்தவித ஆபத்தையும் தவிர்க்கும் வகையில் பிரான்ஸ் பாதுகாப்பு சேவைகள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.