கவினுடன் கைகோர்க்கிறாரா நயன்தாரா?: வெளியான புகைப்படம்

0
88

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் கால் பதித்து, வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கவின். தற்போது இவர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் நயன்தாரா மற்றும் கவின் ஆகிய இருவரும் அவரவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் படம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையில் வெளிவரவில்லை.