சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன் நடக்கும் கதையாக இது அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவுடன் எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இமையமைப்பில் இத் திரைப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தின் அடுத்த பாடலான ‘தக்கிட தகிமி’ என்ற பாடல் தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.