“ஏன் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்தேன்“ – வருந்தும் மஞ்சிமா: இதுதான் காரணம்

0
36

நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை இரண்டு வருடங்களை பூர்த்தி செய்த நிலையில் அண்மையில் பேட்டியொன்றில் பேசிய மஞ்சிமா, தான் கௌதமை திருமணம் செய்ததற்காக வருத்தப்படுவதாக கூறினார்.

அதற்கான காரணம், திருமணத்துக்கு முன்பே மஞ்சிமா சற்று உடல் பருமனானவர். திருமணத்துக்குப் பின்னர் அவரது உடல் எடை மேலும் அதிகரித்தது. இவ்வாறிருக்க அவரது உடல் எடையை பார்த்த பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? எனக் கேட்டு வருகின்றனராம்.

இதைக் கேட்டு சில சமயங்களில் மஞ்சிமா அழுதிருக்கிறாராம். மேலும் சமூக வலைத்தளங்களில் வரும் கமெண்ட்களைப் பார்த்து அவரது குடும்பத்தினரும் கௌதமும் கவலைப்படுவார்களாம். இதனால் தன்னால் கௌதம் பாதிக்கப்படும்போது நான் ஏன் அவரை திருமணம் செய்துகொண்டேன் என வருத்தப்படுவாராம்.

ஆனால் கௌதம் இதை எப்பொழுதுமே தன்னிடம் காட்டிக்கொள்வதில்லை எனவும் அவருக்கு எப்பொழுதும் ஆறுதலாக இருக்கிறார் எனவும் அதனால் எந்தவொரு கமெண்ட்டும் தன்னை இப்போது பாதிப்பதில்லை எனவும் பேசியுள்ளார்.