கவனிப்பாரற்று கிடக்கும் வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம்: குப்பைகளுக்கு மத்தியில் வீற்றிருக்கும் வீரரின் சிலை

0
52

வவுனியா நகரத்தின் மத்தியில் மாவட்ட செயலகத்தின் முற்பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிகிறது.

சரியான பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. கடந்த காலங்களில் பண்டாரவன்னியனின் பெயரில் சில அமைப்புகள் காணப்பட்டன. ஆனால், அந்த அமைப்புக்களும் தற்போது பண்டாரவன்னியனின் சிலையைப் போலவே கேள்விக்குறியாக உள்ளன.

வன்னியின் அடையாளமாக காணப்படும் பண்டாரவன்னியின் சிலைக்கு இப்படியொரு நிலையா? மாவட்ட செயலகத்தினராவது இதனை கருத்தில்கொண்டு இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஞாபகார்த்த நாட்களில் மாத்திரம் இதனை சுத்தம் செய்வதைவிடுத்து, தொடர்ந்தும் இந்தப் பகுதியை பராமரிப்பதற்கு உரிய அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புகள் முன்வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.