3 குழந்தைகளையும் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு இளம் தாய் தற்கொலை முயற்சி!

0
36

தனது 3 பிள்ளைகளை ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்த்து கொள்ளவிருந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் ரயிலில் முன் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்ற நிலையிலேயே ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியக அதிகாரிகள் அவரை காப்பாற்றி டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 ஹட்டன் டிக்கோயாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான இவர் தனது கணவருடன் வாழ முடியாது என ஹட்டன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், 08, 06, 04 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகளும் மற்றும் ஒரு பெண் குழந்தையை பொலிஸார் தமது பொறுப்பில் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது அவர் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் மூன்று குழந்தைகளையும், அவர்களின் தந்தையிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.