அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்ய பிடியாணை: பல குற்றச்சாட்டுக்கள்

0
27

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருச்சநம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிவாதியாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திற்கு முன்னதாக ஆஜராகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர் சார்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் குற்றவியல் பிரவேசம் செய்தமை மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கல்பிட்டி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.