தேர்தலுக்கு முன்னதாக வன்முறை: ஐ.தே.கட்சியினரின் பதாதைகளுக்கு சேதம்

0
29

தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனோடு சேர்ந்து வன்முறைகள், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலைமையினையும் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், தம்புள்ளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாகைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைமையில் இன்று காலை குறித்த அலுவலகம் திறக்கப்படவிருந்ததாக தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் பிரியன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.