15வது திருமண நாளை கொண்டாடிய தல தோனி: வைரல் வீடியோ

0
55

15வது திருமணநாளை கொண்டாடும் தல தோனி, சாக்ஷியை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் திருமணநாளை கொண்டாட தோனியும், சாக்ஷியும் கேக் வெட்டிய காணொளி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது தோனியோ, சாக்ஷியோ இல்லை அவர்களின் செல்ல நாய் தான்.

தோனியும், சாக்ஷியும் கேக் வெட்ட அவர்களுக்கு இடையே இருக்கும் சேரில் செல்ல நாய் இருந்தது. கேக் வெட்டி அதை சாக்ஷிக்கு தோனி ஊட்டிவிட பதிலுக்கு அவர் தன் கணவருக்கு ஊட்டிவிட்டார்.

அதை பார்த்த செல்லம், இங்க நான் ஒருத்தன் இருக்க நீங்க மட்டும் கேக் சாப்பிடுறீங்களே. எனக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைஞ்சா போயிடுவீங்க என்பது போன்று பார்த்தது. அதன் மைண்ட் வாய்ஸ் கேட்டு தோனி கேக் கொடுக்கிறார். இது குறித்த காணொளி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.