நடிகை வரலக்ஷ்மி சரத்துமார் மற்றும் நிகோலேவின் திருமணம் எப்போது நடக்கும் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று புதன்கிழமை இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Reception) சென்னையில் கோலாகலமாக நடந்துள்ளது.
இவர்களது மெஹந்தி விழா, சங்கீத் போன்ற நிகழ்வுகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. தற்போது இவர்களின் திருமண வரவேற்புக்கு பல சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.