செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி!

0
35

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள மிக்சர் விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி அன்று இரவு பொரிந்த நிலையில் காணப்பட்ட பல்லியுடன் மிக்சர் நுகர்வோரிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்டதாகும். இதனையடுத்து நுகர்வோரினால் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகரால் பல்லியுடன் விநியோகிக்கப்பட்ட சட்டநடவடிக்கையின் பொருட்டு கைப்பற்றப்பட்டது.

அதேவேளை செல்வச்சந்நிதியானை தரிசிக்க நாளதோறும் பெருமளவு பக்கதர்கள் வந்து செல்லுவதுடன், குழந்தைகளும் வருகை தருகின்றனர். ஆலய சுற்றாலில் உள்ள கடைகளில் தினபண்டங்களை அவர்கள் வாங்கி செல்வதுடன் குழந்தைகளுக்கும் அதனை கொடுக்கின்றனர்.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் அவதானமெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.