நாமல் உயன தேரரின் வேண்டுகோளில் மடாட்டுகம-ஆடியாகல வீதி புனரமைப்பு

0
84

கல்கிரியாகம தேசிய நாமல் உயனவின் ஸ்தாபகர் வண. வனவாசல ராஹுல நாயக்க தேரரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் மடாட்டுகம-ஆடியாகல வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மிகவும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பான தேசிய நாமல் உயன மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்தின் அபிவிருத்திக்காக, வணக்கத்திற்குரிய வனவாசி ராஹல நாயக்க தேரர் பல தசாப்தங்களாக பல தனித்துவமான தேசிய சமய மற்றும் சமூக சேவைகளை செய்து வருகின்றார்.

இதன்படி, தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்ற இப்பிரதேசத்தின் வீதி அமைப்பை புனரமைக்குமாறு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் தேரர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மடாட்டுகமவில் இருந்து ஆடியாகல வரையிலான 13 கிலோமீற்றர் வீதிக்கு காபட் இடும் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மடாட்டுகம தொடக்கம் தேசிய நாமல் உயன வரையான எட்டு கிலோமீற்றர் வீதியானது காபட் இடப்பட்டு புனரமைக்கப்படவுள்ளது.

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தில் பணிப்பாளர் ஆர். எம். வி. பண்டார, அனுராதபுர பிரதம பொறியியலாளர் சுதர்மன் பெரேரா மற்றும் ஏனைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.