நவம்பர் 27 நேற்றையதினம் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டிருந்த்து.
விடுதலைபுலிகளின் தலைவர் மகள் துவாரகா, மாவீரர் தின உரை சமுகஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பதிவிடுகையில்,
மிக தவறான செயல்
தலைவர் பிரபாகரன் ஒருபோதுமே வாரிசு அரசியலை குடும்ப அரசியலை ஏற்காத ஒரு உன்னத தலைவர்! மாவீரர் உரைகள் 1989, தொடக்கம் 2008, வரை 20 உரைகள் மட்டுமே அவரால் நிகழ்த்தப்பட்டது! அவரை விட வேறு எவரும் அதை நிகழ்த்த தகுதி இல்லை!
தற்போது 2023 கார்த்திகை 27ல் துவாரகா என்று காட்டப்பட்ட பெண் யாராக இருந்தாலும் மாவீரர் தின உரை நிகழ்த்துவதாக காட்டப்பட்டது மிக தவறான செயல்…
அப்படி ஒரு உரை துவாரகா எனும்பெயலில் உரையாற்ற வேண்டும் என விரும்பிய ஏற்பாட்டாளர்கள் அதை மாவீரர்தின உரை என கூறாமல் வேறு ஒரு பெயரில் துவாரகாவின் உரை என கூறியிருந்தால்கூட அதை பார்த்துவிட்டு கடந்து செல்லலாம்!
ஆனால் மாவீரர் தின உரை என அந்த பெண்ணை எழுதிக்கொடுத்து வாசிக்கவைத்தது தலைவரின் சிந்தனைக்கு கரிபூசும் விடயமாகவே நான் பார்கிறேன்..!
சிலவேளை அடுத்த 2024 கார்திகை 27 ல் இன்னும் பல துவாரகாக்கள், அல்லது சாள்ஷ் அன்னடிக்கள் மாவீரர் தின உரை என படம் காட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..! யாரோடு நோவோம்..!
-பா. அரியநேத்திரன்-