தெற்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில்

0
189

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) மாலை நடைபெறும் தெற்கு ஆசிய நாடுகளின் 2ஆவது உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இந்த உச்சி மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கி வைத்தார். மெய்நிகர் வடிவில் இடம்பெறும் இந்த மாநாட்டில் மாலைத்தீவில் இருந்தப்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார். மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது மூயிஸ் இன்று பதவியேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பல்வேறு சந்திப்புகளையும் ஜனாதிபதி நடத்த உள்ளார்.

இன்றுடன் பதவிக்காலம் முடிவடையும் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹையும் ஜனாதிபதி ரணில் நேற்று இரவு மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.