காஸாவில் கைகளால் உடல்களை தோண்டி எடுக்கும் அவலம்

0
70

காசாவில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் அங்கு துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ள நிலையில் உடல்களை கைகளால் தோண்டி எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதை சகித்துக் கொண்டு எப்படியாவது உறவினர்களின் உடல்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

காசாவில் உடல்களை கைகளால் தோண்டி எடுக்கும் அவலம் | Digging Up Bodies By Hand In Gaza Is A Tragedy

உடல்கள் அழுகி துர்நாற்றம் 

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி , யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 1,400 பேர் கொல்லப்பட்டதுடன் 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

காசாவில் உடல்களை கைகளால் தோண்டி எடுக்கும் அவலம் | Digging Up Bodies By Hand In Gaza Is A Tragedy

இதனையடுத்து வெகுண்டெழுந்த இஸ்ரேல் காசா மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. போர் தொடங்கிய நேரத்தில் ஏவுகணைகள் மூலம் காசாவை தாக்கியது.

இடைவிடாத இஸ்ரேல் படையினரின் வான்தாக்குதலுக்கு உள்ளான காசா உருக்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கட்டட இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன.

காசாவில் உடல்களை கைகளால் தோண்டி எடுக்கும் அவலம் | Digging Up Bodies By Hand In Gaza Is A Tragedy

இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை உறிவினர்கள் மீட்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் இரும்பு கம்பிகளை கொண்டு இடிபாடுகளை நீக்கி வருகிறார்கள். பலர் எந்தவித உதவிப் பொருட்களும் இல்லாததால் கைகளால் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உடல்களை வெளியே எடுக்கும் அவல நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.