நுளம்பு உருளை கேட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் எழுதிய சஜித்தின் தாய்!

0
103

எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயாரும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஹேமா பிரேமதாச தனக்கு தேவையான சில பொருட்களை வழங்குமாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்த தகவல்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி அலுவலகக் கணக்காளருக்கு இந்தக் கோரிக்கை அடங்கி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடிதத்தில் இரண்டு நுளம்புச் சுருள்கள் கேட்டு குறிப்பிடப்பட்டிருந்தமை ஆச்சரியமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் கோரிய அளவு பொருட்களை ஜனாதிபதி அலுவலகம் ஏற்கனவே வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.