இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நடத்திய இசை கச்சேரிக்கு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என சர்ச்சை ஏற்பட்டு அதன் பின் டிக்கெட் கட்டணத்தை திருப்பி அனுபுவதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2018ல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்காக விழா நடந்த 29.50 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் அரசு அனுமதி அளிக்காததால் நிகழ்ச்சி ரத்தானது. ஆனால் ரஹ்மான் வாங்கிய முன்பணத்தை திரும்ப தரவில்லை ஏன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகி சென்னை போலீஸ் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் எதிர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். நிகழ்ச்சி ரத்தானால் முன்பணம் திரும்ப தரப்பட மாட்டாது என ஒப்பந்தத்திலேயே இருந்தது. ஆனால் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டு இருப்பதற்கு 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லை என்றால் மானநஷ்ட ஈடாக 10 கோடி தரவேண்டும் என கேட்டிருக்கிறார் ரஹ்மான்.