பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என். ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.
இந்நிலையில் அவர் அண்மையில் கனடா – டொரன்டோவில் நடைபெற்ற இந்தோ – கனடியன் விழாவில் கனடா இந்தியா அறக்கட்டளையின் (CIF) மதிப்புமிக்க குளோபல் இந்தியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதி மிக்க குறித்த விருதினை சுதா மூர்த்தி ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள தி ஃபீல்ட் இன்ஸ்டிட்யூட்டுக்கு நன்கொடையாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.