25 வயது இளைஞராக மாறும் ’தளபதி’ விஜய்

0
123

லியோ திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் விஜய் 50 வயது அப்பா வேடம் மற்றும் 25 வயது மகன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

25 வயது மகன் வேடத்தில் நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரை இளைஞராக காண்பிக்கப் போகிறார்கள்.

இதற்காக அண்மையில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்று விஜய்யின் உடலை 3டி ஸ்கேன் செய்து பரிசோதனை நடத்தினர்.

இதோடு இளம் வயது விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகளையும் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் படமாக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தளபதி 68 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.