பூஜையுடன் தொடங்கிய விஜய்யின் தளபதி 68 படப்பிடிப்பு

0
100

தளபதி 68 படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாத்திரமே பங்கேற்றனர்.

லியோ படத்தின் வெளீட்டை தொடர்ந்து இந்த பூஜையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதேபோல படத்தில் தற்போது மைக் மோகன் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 68

சென்னையில் நாளை துவங்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு, வரும் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

மேலும், தளபதி68 படத்தின் பூஜை எளிமையாக படக்குழுவினரை மட்டுமே வைத்து நடத்தப்பட்டாலும் இதன் சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.