சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி விமானத்தில் சென்று பிச்சையெடுக்கும் பாகிஸ்தானியர்கள்!

0
86

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளுக்குள் செல்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் டூரிஸ்ட் விசாக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

யாசகம்

ஜப்பான் நாடுகளுக்கும் செல்கின்றனர். அங்கு அவர்கள் யாசகம் கேட்கத் தொடங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியாவில் யாசகம் கோருவோர் மற்றும்

பிக்பாக்கெட் அடிப்போரில் பெரும்பான்மையானோர் பாகிஸ்தானியர்கள் என்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று புதிய வாய்ப்புகளைத் தேடி பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கத்தார், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர்.