நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை! ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்

0
134

தற்போது பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

மிக முக்கிய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி 

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிரச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக  குறிப்பிட்டுப் பதவியை துறந்து நாட்டைவிட்டும் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அவரைத் தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் மற்றும் அவர் கூறியதாக சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என குறிப்பிட்டார்.