பொலன்னறுவை பகுதியில் பெரிய வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அப் பகுதிகளில் 30 ஏக்கர் அளவான நிலப்பரப்பில் பெரிய வெங்காயச் செய்கை இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
இந்தநிலையில் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கான வரியினை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அநுராதபுரம் பகுதியிலும் தற்போது நிலக்கடலை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய விலையில் நிலக்கடலை விற்பனை செய்யப்படாமையினால் பயிர்ச்செய்கைக்காக செலவிடப்பட்ட தொகையை கூட பெற்றுக்கொள்ள முடியாதநிலை உள்ளதாக பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.