நாட்டை காப்பாற்றும் இறுதி சந்தர்ப்பத்தை எமக்கு வழங்குங்கள் – தேசிய மக்கள் சக்தி

0
240

சுகாதாரம், கல்வி, பொருளாதரம் என அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து இலங்கை வங்குரோத்து அடைந்து ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

வங்குரோத்து அடைந்து ஆபத்தான நிலைமையில் இருக்கும் நாட்டை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் காப்பாற்றி ஆரோக்கியமான சுபீட்சமான நிலைமைக்கு கொண்டு வர தயாராக இருக்கின்றோம்.

75 ஆண்டுகளாக வேறு ஆட்சியாளர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய நாட்டை ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய மக்கள் சக்தியிடம் வழங்குங்கள்.

ஐந்தாண்டுகளுக்கு பின்னர் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்திருந்தால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்குங்கள் இல்லையென்றால் விரட்டியடியுங்கள் எனவும் சமந்த வித்தியாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.