விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு..

0
305

கண்டியில் விக்டோரியா வனப்பகுதியில் தலத்துஓயா காவல்துறையினரால் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி- ஹங்குரன்கெத்த பிரதான வீதியின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் உள்ள வனப்பகுதியிலேயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 40 மில்லிமீற்றர் அளவிலான கைக்குண்டு உந்துகனை ஒன்று, ஒன்பது எல்எம்ஜி தோட்டாக்களும், 50 மில்லிமீற்றர் அளவிலான விமான எதிர்ப்பு வெடிமருந்துகள் மற்றும் மூன்று கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அவ் வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.