யுத்த காலத்தில் வடகொரியா ஊடாக இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது – கலாநிதி மஹிந்த பத்திர

0
91

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள ஊடகத்தில் வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி இடையிலான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இது மேற்குலக நாடுகளை பதற்றமடைய செய்யும் நிலைமையை உருவாக்கியுள்ளது.

North Korean Leader Kim and Russian President Putin
North Korean Leader Kim and Russian President Putin

இந்த சந்திப்பின் மூலம் ரஷ்யாவுக்கு தேவையான மேலதிக ஆயுதங்களை பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி வடகொரியாவுக்கு உணவு மற்றும் செய்மதி தொழிற்நுட்பங்களை பெற்றுக்கொள்ள உதவும்.

அத்துடன் வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா இரண்டாம் தரப்பின் ஊடாக வடகொரியா மூலம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் குளிர்காலத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் புதிய பரிமாணத்தை நோக்கி செல்லும். இது மேற்குலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமையும்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது, சீனா, இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கு பதிலாக தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியது. தற்போது ரஷ்யா சம்பந்தமாகவும் நடப்பது அதே நிலைமையே எனவும் மகிந்த பத்திரன மேலும் கூறியுள்ளார்.

North Korean Leader Visit Russia