எனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மக்களின் ஆணையை நான் உதாசீனம் செய்யவில்லை. அவர்களின் பக்கமே நின்றேன். எதிர்வரும் காலத்திலும் மக்கள் பக்கமே நின்று தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல், மோசடியற்ற ஜனாதிபதி
தேர்தல்கள் நெருங்கும் வேளையில் சலசலப்புகளுக்குப் பஞ்சமில்லை. நான் எந்தச் சலசலப்புகளுக்கும் அஞ்சமாட்டேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவருக்கும் தாரைவார்க்கவும் மாட்டேன். ஊழல், மோசடியற்ற ஜனாதிபதியாக நான் பதவி வகித்தேன்.
இதை விரும்பாத கும்பல், என் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டை முன்வைத்து என் அரசியல் பயணத்துக்குக் களங்கம் விளைவிக்க முயன்றது.
ஆனால், இறுதியில் நடந்த உண்மை வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் எவருக்கும் மன்னிப்பு வழங்கக்கூடாது என தெரிவித்தார்.