யார் பைத்தியம், யார் மூளையை பயன்படுத்த முடியாதவர் என்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும், முன்னாள் அமைச்சரும் தற்போதைய சுயாதீன எதிரணி நாடாளுமன்ற உறுப்பினருமான சன்ன ஜயசுமனவுக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (08.09.2023) கருத்து தெரிவிக்கையில், “பைத்தியம் கலக்கமடைந்தால் வைத்தியர்கள் கலக்கமடைவதில்லை என குறிப்பிடுவார்கள். இவரை வைத்தியர் என்கிறார்கள். ஆனால் இவர் ஒரு பைத்தியம் அதனால் தான் தொப்பியை எடுத்துப் போட்டுக் கொள்கிறார்” என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எழுந்த சன்ன ஜயசுமன “மனித குலம் மூளையை முறையாக பாவித்து செயற்பட வேண்டும். அறிவை பயன்படுத்த முடியாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது எமது தவறு அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.