ஜோ பைடன் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

0
273

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும் ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோபிடன் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோபைடன் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி | Jobaidan Wife Confirmed Infected With Corona Virus

அத்தோடு திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வரும் 7 ஆம் திகதி பிடன் இந்தியா செல்வதாகவும் செப்டம்பர் 8 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்துவதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 9ம் திகதி ஜி-20 மாநாட்டில் ஜோ பிடன் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.