இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், அதன் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடன் நெருக்கடி உலகிற்கு, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகுந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவின் G20 தலைவர் பதவியானது கடன் பாதிப்புகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் நெருக்கடி அல்லது அதனைச் சந்தித்த நாடுகள் நிதி ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் நெருக்கடியால் சில நாடுகள் கடினமான காலங்களை எதிர்கொள்வதனைப் பார்த்த ஏனைய நாடுகள் அந்த தவறான வழிகளை தவிர்ப்பதில் விழிப்புணர்வுடன் உள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடன் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு உதவ கடன் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பின் அவசியத்தை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, உலகின் மிகப்பாரிய இரண்யனிக் கடன் வழங்குநராக கருதப்படும் தீனா கடன் மறுசீரமைப்பு குறித்த சில திட்டங்களுக்கு தயக்கம் காட்டி வருகின்றது.
இந்த நிலையில், 70 இருக்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் 326 பில்லியன் அமெரிக்க டொலர் கோட்டுக்கு கடன் சுமையினைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியம், உலக வாங்கி மற்றும் G20 நாடுகளின் தலைமை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உலகளாவிய இறையாண்மைக்கு கடன் தொடர்பான மாநாடு இந்த ஆண்டு முதற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இது முக்கிய பங்குதாரர்களிடையே தொடர்பை வலுப்படுத்தும் மற்றும் கடன் மறுசீரமைப்பை எளிதாக்கும் எனவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து பல்வேறு மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது இதுபோன்ற சூழ்நிலைகள் தொடர்ந்து நிகழாமல் இருப்பதனை உறுதி செய்யுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாரியளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல்வேறு நாடுகளின் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.