இந்த அபூர்வ மச்சம் உங்களுக்கு இருக்கின்றதா!.. கோடீஸ்வர் யோகம்

0
337

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உடம்பில் மச்சம் என்பது இருக்கவே செய்யும். ஒன்றுக்கு மேற்பட்ட மச்சங்கள் இருக்கும் நிலையில், பிறக்கும் போதே உடலில் இருக்கும் நவகிரக மச்சத்தை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

சூரிய மச்சம்

உடம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் மங்கலான மஞ்சள் நிறத்தில் இருக்கும் மச்சமே சூரிய மச்சம் ஆகும். இந்த மச்சம் இருப்பவர்கள் சூர்ய பகவானின் அருளை பெற்றதுடன், துணிச்சல் மிக்கவர்களாகவும், தலைமைப் பண்பு உள்ளவர்களாகவும், உயர்பதவிகளிலும் இருப்பார்களாம். சிலருக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுமாம்.

இந்த அபூர்வ மச்சம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ கோடீஸ்வர் யோகம் நிச்சயம் | Who Has This Mole Will Be Millionaire

சந்திர மச்சம்

உடம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் சற்று வெளிர் நிறத்தில் சந்திரன் போன்ற வடிவில் மச்சம் இருக்கும். இவர்கள் அவசர புத்தியுடனும், மற்றவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்கவும் மாட்டார்கள். இந்த மச்சம் உள்ள நபர்களுக்கு முரட்டு சுபாவம் இருப்பதுடன் செல்வநிலையும் ஒரே மாதிரியாகவும் இருக்காமல் மாறிக்கொண்டே இருக்குமாம்.

செவ்வாய் மச்சம்

உடம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் சிகப்பு நிறத்தில் பெரிதாகவே அல்லது சிறிதாகவே இருக்கும் மச்சம் தான் செவ்வாய் மச்சம் ஆகும். செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள் துணிச்சல் உள்ளவர்களாவும், எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசுவார்களாம்.

இந்த அபூர்வ மச்சம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ கோடீஸ்வர் யோகம் நிச்சயம் | Who Has This Mole Will Be Millionaire

புதன் மச்சம்

மாநிறத்தில் உடம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் காணப்படும் மச்சம் புதன் மச்சம் ஆகும். புதனின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள் சிறந்த அறிவாளியாகவும், உதையும ்ஆராய்ந்து பார்க்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சொந்த முயற்சியில் தான் முன்னோர்வார்களாம்.

குரு மச்சம்

உடம்பில் நீல நிறத்தில் இருக்கும் மச்சமே குரு மச்சம் ஆகுமாம். குருவின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள் உடல் பருமன் ஆனவர்களாக இருப்பதுடன், ஆன்மீக சிந்தனையும் அதிகம் கொண்டவர்களாகவும், சிலர் வழக்கறிஞர்களாகவும், ஆசிரியர்களாகவும், அறிவுரை கூறிக்கொண்டேயும் இருப்பார்களாம். 

சுக்கிர மச்சம்

பழுப்பு மற்றும் வெளிர் கலந்த நிறத்தில் இருக்கும் மச்சம் தான் சுக்கிர மச்சம், இந்த மச்சம் இருப்பது மிகவும் அபூர்வம் என்று கூறப்படுகின்றது. இனிமையாக பேசும் தன்னை கொண்ட இவர்களுக்கு காம உணர்வு அதிகமாக இருக்குமாம். இவர்கள் அழகும், செல்வமும் ஒரே சேர பெற்றிருப்பார்களாம்.

சனி மச்சம்

உடம்பில் எங்காவது பெரிதாக கருப்பு நிறத்தில் இருக்கும் மச்சம் தான் சனி மச்சம் ஆகும். இவர்கள் கடினமாக உழைப்பதுடன், இவர்களை யாராவது புகழ்ந்தால் உடனே மயங்கி விடுவார்களாம். தனிமை விரும்பிகளாக இருக்கும் இவர்கள் யார் என்ன தீங்கு செய்தாலும் நல்லது செய்தாலும் மறக்கவே மாட்டார்களாம்.