பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி.
தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக ஜனனி மாறியதுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
க்யூட்டான புகைப்படங்கள்
அதன் பின்னார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அத்துடன் தளபதி 67 – லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து மேடையில் நின்று கியூட் ரியாக்சன் கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது.